அண்ணா பல்கலை., துணைவேந்தர் தேர்வுக் குழு: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரதேவன் நியமனம்

அண்ணா பல்கலை., துணைவேந்தர் தேர்வுக் குழு: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரதேவன் நியமனம்

sundaradevan

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவில் அரசுப் பிரதிநிதியாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வேந்தரும், தமிழக ஆளுநருமான வித்யாசாகர் ராவின் பிரதிநிதியாக முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவும், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினராக கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் கே.அனந்த பத்மநாபனும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசுத் தரப்புப் பிரதிநிதியாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.சுந்தரதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவானது மூன்று மாதங்களுக்குள் புதிய துணைவேந்தருக்காக மூன்று பேரின் பெயர்களை பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *